27.-30.ஏப்ரல் 2023 [நான்கு நாட்கள்]
என்றும் அன்புள்ள கலைஞர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
உலகம் முழுவதும் வாழ்கின்ற திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 14-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
எமது தாயகத்தில்(ஈழம்) வாழ்கின்ற படைப்பாளிகள் அனைவரும் இந்த ஆண்டும் பதிவு கட்டணம் ஏதுமின்றி உங்கள் திரைப்படங்களை நோர்வே தமிழ்த் திரைப்பட விழா குழுவுக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்ப அழைப்பிதழ் : 30.10.2022 ஆரம்பித்து விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2023 நிறைவுபெறும்.
நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின்(2023) போட்டிகளுக்கான பிரிவுகள் :
NTFF 2023 தமிழ் மொழி :- குறும்படங்கள் – முழுநீளப் படங்கள் -காணொளிகள் -ஆவணப்படங்கள் -அனிமேஷன் படங்கள்
NTFF 2023 சர்வதேச மொழிகள் : -குறும்படங்கள் – முழு நீளப் படங்கள் – காணொளிகள் – ஆவணப் படங்கள் – அனிமேஷன் படங்கள்.
கடந்த பதின்மூன்று ஆண்டுகள் தமிழகத்தின் திரைத்துறைக் கலைஞர்களை, உலகத் திரைத்துறைக் கலைஞர்களை வாழ்த்தி, பாராட்டி, அங்கீகாரம் அளித்து, உலகத் தமிழர்களின் சிறந்த விருதாக “தமிழர் விருதுகள்” வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நோர்வே நாட்டிற்கு அனைத்துக் கலைஞர்களையும் அழைத்து தமிழர் விருது வழங்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பினும், அது எமக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது.
ஆகவே திரைத்துறைக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் உங்களுடைய சுய விருப்போடு, நோர்வே நாட்டிற்கு வந்து தமிழர் விருதை பெற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றோம்.
தமிழ்நாட்டு அரசின் கலைத்துறை பிரிவு இதற்கான ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு(2022) வெளியான திரைப்படங்களுக்கு “தமிழர் விருதுகள்” தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நாளில் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும்.
ஆகவே இனி வரும் காலங்களில் தமிழகத்தில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் உங்கள் திரைப்படங்களை முன்கூட்டியே அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் – காணொளிகள்- முழுநீளத் திரைப்படங்களுக்கு தமிழர் விருதுகள் எதிர்வரும் 15.02.2023 அன்று அறிவிக்கப்படும்.
14 ஆண்டுகளாக உங்கள் அனைவருடைய இதயபூர்வமான ஆதரவும், ஒத்துழைப்பும் தான் நாங்கள் இத்தனை வருடங்களாக திரைப்பட விழாவை திறம்பட நடத்த பெரிய ஊக்கமாக இருந்தது.
ஆகவே உங்கள் பேராதரவையும், பேரன்பையும் தொடர்ந்து எமக்கு வழங்குவீர்கள் என்று நம்புகின்றோம்.
உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்! எங்கள் மதிப்பீட்டினை வழங்க காத்திருக்கின்றோம்.
என்றும் அன்புடன்.
வசீகரன் சிவலிங்கம்
இயக்குநர்
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா
05.11.2022
Norway Tamil Film Festival – Tamilar Awards 2023
27.-30.April [4 days festival]
Please send your Movie (MPEG4) via Google drive to [email protected]
You have to pay an entry fee and send us an NTFF form.
Entry Fee: Paypal: [email protected]
Entry fee for feature/ Full length film -100(Euros)
Entry fee for Short Film, Music Videos, Animation and Documentary- 50(euros)
NTFF Jury and Committee will evaluate your film and announce the result on 15.02.2023, the same will be published in NTFF webpage, follow us on Facebook for regular updates about NTFF 2023 event.
Please refer to the rules and regulation below, Do not hesitate to contact us if you have any questions.
Thank you.
Best Regards,
Vaseeharan Sivalingam
Festival Director
Oslo, Norway