ஆட்சிக்கு வந்து ஒரு வருடம்: லிபரல் கட்சி தவறவிடப்பட்ட உத்தரவாதங்கள் – தமிழர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகின்றார்களா?
கனடாவின் பல தொகுதிகளில் தமிழர்களின் வாக்குக்களால் வெற்றியைப் பெற்ற லிபரல் கட்சியானது தனது வாக்குறுதிகள் எதனையுமே நிறைவேற்றாதது குறித்து விசணமடைந்துள்ளனர்.
குறிப்பாக பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பின் கௌரவ ஜஸ்ரின் ரூடோ அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக தமிழர்களின் நிகழ்வுகள் எதனிலும் கலந்து கொள்ளவில்லையென்ற கவலை ஒருபுறம் தமிழர்கள் அனைவரையும் வாட்டி வதைத்த வண்ணமேயுள்ளது.
அதிலும், இலங்கை விவகாரத்தில் நேரடி நடவடிக்கை எடுக்கச் சென்ற குழுவில் இலங்கைப் பிரஜைகள் யாரெல்லாம் சென்றார்கள் என்ற கேள்விக்கான பகிரங்க விடை தெரியாத காரணத்தால் இக் குழப்பம் மேலும் நீடிக்கின்றது.
கனடாவில் வாழும் பெரும்பாண்மை இனத்தவரும், சிறீலங்கா அரச சார்பான கனடாவிலுள்ள தமிழர்கள் பலருமே இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர், ஹரி ஆணந்தசங்கரி சார்பானவர்கள் கடுமையாகப் புறக்கணிக்கப்பட்டார்கள் என்ற செய்தி கசிந்த போதும் இச் செய்தி எழுதப்படும் வரை அது உறுதி செய்யப்படவில்லை.
தான் வாழுகின்ற தொகுதியிலுள்ள வேற்று இன மக்களின் நிகழ்வுகளிற்கு செல்கின்றாரா என்ற கேள்விக்கான விடையை தேடும் அவரது வாக்காளர்களிடையே எழும் பல கேள்விகளைத் தவிர்;த்து வருவதான ஹரி மீதான குற்றச்சாட்டுக்களை தவிர்;த்து,
இந்த அரசு, தான் தேர்வு செய்யப்பட்டதும் தமிழர்களிற்கு செய்வதாக, கூறியவற்றில் (அவர்கள் தேர்தலின் போது அறிவித்தது கீழே தரப்பட்டுள்ளது) எதனைச் செய்தது என்பதை மக்களிற்குத் தெரியப்படுத்தும் ஒரு பாரிய பொறுப்பு ஹரி அவர்களில் தங்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
கனடிய வெளிநாட்டமைச்சர் இலங்கை “உத்தியோகபூர்வமாகச்” சென்றிருந்த தருணத்தில் தனது பணத்தில் “தனிப்பட்ட” இலங்கை விஜயத்தை மேற்கொண்ட திரு. ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் தனது தந்தையாரை சுமார் 15 நிமிட நேரம் மரியாதையின் நிமித்தம் சந்தித்துக் கிளிநொச்சியில் பேசியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கீழேயிருக்கின்றது லிபரல் கட்சி தேர்தலின் போது தந்த வாக்குறுதி.
“ஜஸ்ரின் ரூடோ இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட வேண்டும் என்றால் பொறுப்புக் கூறல் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்,
இலங்கையுடனான இணக்கப்பாடு என்பது கனடாவின் மூன்று கடப்பாடுகளின் நிறைவேற்றத்தில் தங்கியுள்ளது.
பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார்”.
“கனடா இலங்கையோடு இணங்கி நடப்பது என்ற இந்த முக்கியமான நடவடிக்கை எந்தவிதமான, ஒளிவு மறைவுகளும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன், கனடாவின் மற்றைய சர்வதேசக் கடமைகளுடன் ஒத்ததாகவே இருக்கும்.
கனடியப் பிரதமர் சார்பில் இந்த அறிவித்தலை விடுத்த இருவர் முக்கிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருப்பதால் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன. பிரம்டனைச் சேர்ந்த நவ்டீப் பெய்ன் பொருளாதார அமைச்சராகவும், மார்க்கத்தைச் சேர்ந்த ஜோன் மால்கம் கனடிய குடிவரவு குடியகல்வு அமைச்சராகவும் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிறிலங்காவோடு இணக்கப்பாட்டுடன் நடப்பதாயின் பின்பற்றவேண்டிய மூன்று கடப்பாடுகளை கனடாவின் லிபரல் கட்சி முன்மொழிந்துள்ளது.
1. இலங்கையில் பொறுப்புக் கூறல் ஐக்கிய நாடுகள் அவை ஆணையாளர் அவர்களால் நடத்தப்பட்ட புலன் விசாரணை அறிக்கைகையின் (OISL) அடிப்படையில் ஒக்டோபர் 01, 2015 அன்று சிறிலங்கா பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை (ஐநாமஉஅ) நிறைவேற்றிய தீர்மானத்தை நாங்கள் எச்சரிக்கை கலந்த நம்பிக்கையோடு வரவேற்கிறோம்.
b. நியூயார்க் / ஜெனீவா நகரங்களில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைகள் அவையின் தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கனடா அதன் இராஜதந்திர செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.
c. கனடா, ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உரிமைக் கட்டளைக்கு அமைய உருவாக்கப்பட்ட கலப்புப் பொறிமுறைக்கு எங்கள் நிபுணத்துவத்தை (புலனாய்வாளர்கள், வழக்குத்தொடுநர், நீதிபதிகள்) நல்க வேண்டும்.
d. இலங்கையில் பொறுப்புக் கூறலை அடைவது பற்றிய முன்னேற்றத்தை கனடா தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கனடா UNHRC இன் 32 வது மற்றும் 34 வது அமர்வுகளில் இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்பதுடன் தேவையேற்படும் போது ஐக்கிய நாடுகள் அவையில் கூடுதலான தலையீட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
e. கனடாவில் வசிக்கும், போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை இழைத்தவர்கள் மீது உலகளாவிய சட்டதிட்டங்களின் கீழ் வழக்குத் தொடர வேண்டும்.
f. சிறிலங்காவின் ஆயுதப் படைகளின் கட்டளை அதிகாரிகளாக எவரேனும் செயற்பட்டிருந்தால் அப்படிப்பட்டவர்கள் பயணம் மேற்கொள்வதற்கு எதிராக நாங்கள்
பயணத்தடையை நடைமுறைப் படுத்த வேண்டும்.
g. இலங்கையில் 1948 ஆம் ஆண்டு தொடக்கம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உட்பட தீவிர அனைத்துல குற்றங்கள் இழைத்தோருக்கு எதிராக ஒரு குற்றவியல், அனைத்துலக, சுதந்திர புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை நாம் வற்புறுத்துவோம்.
(2) நீண்ட கால அரசியல் தீர்வு
a. கனடா லிபரல் அரசு இலங்கையில் சமாதானம் மற்றும் உறுதித்தன்மை நிலவ வேண்டும் என்றால் தமிழர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர் ஆகியோரது சட்டப்படியான குறைகளை நீக்குவதற்கு ஒரு நீண்ட கால அரசியல் தீர்வு அவசியம் எனக் கருதுகிறது.
b. இலங்கையில் ஒரு அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படுவதற்கு முயற்ச்சிக்கும் அனைத்து தரப்புக்களையும் கனேடிய அரசு ஆதரிக்க வேண்டும்.
c. தமிழ்த் தேசிய இனம் மற்றும் இதர சிறுபான்மையினரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படவேண்டும் என நாம் நம்புகிறோம்.
d. கனடா இணைப்பாட்சி (சமஸ்டி) பற்றிய நிபுணத்துவத்தை (இலங்கைக்கு) வழங்க முடியும் என நாம் நம்புகிறோம்.
(3) போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல்
a. உள்ளூர் மற்றும் கனடிய அரச சார்பற்ற அமைப்புகளுடன் சேர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேவைபற்றி ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
b. கனடாவின் உதவிகள் பின்வரும் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது உறுதிசெய்யப் படவேண்டும்.
மனவேதனைக்கு உள்ளானவர்களுக்கு மனவள ஆலோசனை பெறுவதற்கும், பெண்களின் முன்னேற்றத்திர்க்கு அதிகாரம்கொடுப்பதற்கும் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் இடையில் கூட்டுறவு மற்றும் பரிவர்த்தனை மூலம் உதவி வழங்கல்.
“ஜஸ்ரின் ரூடோ இலங்கைத் தீவில் அமைதி ஏற்பட வேண்டும் என்றால் பொறுப்புக் கூறல் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்,
இலங்கையுடனான இணக்கப்பாடு என்பது கனடாவின் மூன்று கடப்பாடுகளின் நிறைவேற்றத்தில் தங்கியுள்ளது.
பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை அடைவதற்கு கனடா மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய அவசியத்தை ஜஸ்ரின் ரூடோ வற்புறுத்தி வந்துள்ளார்”.
“கனடா இலங்கையோடு இணங்கி நடப்பது என்ற இந்த முக்கியமான நடவடிக்கை எந்தவிதமான, ஒளிவு மறைவுகளும் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன், கனடாவின் மற்றைய சர்வதேசக் கடமைகளுடன் ஒத்ததாகவே இருக்கும்.
கனடாவுக்கு மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றுக்கு ஆதரவளித்தல் தொடர்பான நீண்ட கால வரலாறு உண்டு.
அதே போல் இலங்கை பற்றிய மூன்று கடப்பாடுகளை கடைப்பிடித்தல் அந்தத் தீவின் நீண்டகால சமாதானத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும்.
429 total views, 429 views today