ரணில்விக்கிரமசிங்கவின் ஆட்சியின் கீழும் இலங்கை அரசியலில் மாற்றங்கள் நிகழவில்லை என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகிப்பவர் மாறியுள்ள போதிலும் இலங்கை அரசியலில் சிறிதளவு மாற்றம் கூட இடம்பெறவில்லை என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
அரகலய கோரிக்கைகளிற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற போதிலும் இலங்கை அரசியலில் மாற்றங்கள் நிகழவில்லை என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கவேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அளவுக்கதிகமான அதிகாரங்கள் நீடிக்கின்றன.
அளவுக்கதிகமான நாடளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் என அளவுக்கதிகமான பதவிகளை சலுகைகளை அனுபவிக்கின்றனர்
பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற தருணத்தில் இந்த பதவிகள் அவசியமானவை இல்லை.
பயங்கரவாத தடைச்சட்டம் சட்ட புத்தகத்தில் தொடர்ந்தும் நீடிக்கின்றது சுதந்திரத்தை தொடர்ந்து கட்டுப்படுத்த முயல்கின்றது மக்களை அச்சுறுத்துகின்றது.
பாதுகாப்பு செலவீனங்களிற்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதேவேளை வறிய மக்களிற்கான சுகாதார கல்வி மற்றும் ஏனைய உதவிகளிற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தின் கீழ் நீடிக்கப்பட்ட உயர்பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதற்கான முயற்சி இடம்பெற்றது அதன் பின்னர் கைவிடப்பட்டது- இதற்கு யார் காரணம் என்பது குறித்தும் ஏன் இந்த முயற்சி இடம்பெற்றது என்பது குறித்தும் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளிற்காக ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் ஏனைய விசாரணைகளிற்காக பெருமளவு பணம் செலவிடப்பட்ட போதிலும் தாக்குதல் இடம்பெற்று மூன்றரை வருடங்களின் பின்னரும் மக்கள் விடைகள் தெளிவுபடுத்தல்கள் குற்றவாளிகளிற்கு எதிரான நடவடிக்கைகளிற்காக காத்திருக்கின்றனர்.
யுத்த குற்றங்கள் குறித்த விசாரணைகள் இழப்பீடுகள் படையினரை விவசாய நிலங்களி;ல் இருந்து விலக்கிக்கொள்ளுதல் உட்பட நிலைமையை சுமூகமாக்கும் நடவடிக்கைகள் நல்லிணக்கம் குறித்து சர்வதேச சமூகத்திற்கும் காணாமல்போனவர்களின் தாய்மார்களிற்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களின் பின்னரும்
இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
தீடிரென முன்கூட்டிய எச்சரிக்கை நியாயப்படுத்தல் எதுவுமின்றி தவறாக வழிநடத்தப்பட்ட போராளிகள் மற்றும் நாசகார வழிமுறைகளில் ஈடுபடும் நபர்களை கையாள்வதற்காக புனர்வாழ்வு பணியகம் என்ற சட்டமூலம் நீதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டை முன்னொருபோதும் இல்லாத நெருக்கடிக்குள் தள்ளியுள்ள நிலைமைக்கு காரணமான ஊழல் மற்றும் பொருளாதாரம் தவறாக கையாளப்பட்டமைக்கு காரணமானவர்களை விசாரணை செய்யவேண்டும் என பொதுமக்கள் குரல் எழுப்பியுள்ள தருணத்தில் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரகலயவின் அடிப்படை கரிசனைகளான நமது அரசியல் தலைவர்கள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் பதிலளிக்கும் தன்மையின்மை பொதுபொறுப்புக்கூறல் இன்மை,மற்றும் சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகளி;ற்கான மதிப்பின்மை ஆகியன முற்றாக தீர்க்கப்படாமல் உள்ளன.
இவை அனைத்தும் நிகழும் வேளை வாழ்க்கை செலவு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிகவேகமாக அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.