தெலுங்கு நடிகர் விஜய தேவர கொண்டாவுடன், ‘கிசுகிசு’க்கப்பட்டு வரும், ராஷ்மிகா மந்தனா, அது குறித்து கூறுகையில், ‘தெலுங்கில் என் முதல், ‘ஹிட்’ பட நாயகன், விஜய தேவரகொண்டா என்பதால், அவரிடம் அதிகப்படியான, ‘பிரண்ட்ஷிப்’ வைத்திருக்கிறேன். நாங்கள் இருவரும் அவ்வப்போது ஹோட்டலுக்கு செல்வோம்.
‘இதை சிலர், எங்களுக்குள் காதல் இருப்பதாக, ‘கிசுகிசு’ வெளியிடுகின்றனர். இவர்களுக்கு, நட்புக்கும், காதலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. விஜயதேவர கொண்டா மட்டுமின்றி, என்னுடன் நடிக்கும் அனைத்து, ‘ஹீரோ’களையும் அவர்களுடன் நடிக்கும்போது அந்த படங்களுக்காக காதலிப்பதோடு சரி, அதன்பின், அவர்கள் அனைவருமே எனக்கு நண்பர்கள் மட்டுமே. அதனால், அவர்களுடன் என்னை இணைத்து பேசுவதை விட்டு விடுங்கள்…’ என்று, சில, ‘மீடியா’ நண்பர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.