யாழ்ப்பாணம் மற்றும் கிங்ஸ்டனுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறிப்பது என்ன?
குறித்த ஒப்பந்தம் இலங்கை மற்றும் வாரன் ஹவுசிற்கு இடையிலான மிகவும் முக்கியமானஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என கிங்ஸ்டன் மாநகர சபை உறுப்பினர் குறிப்பிட்டார்.
நேற்று பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) மாநகரம் யாழ்ப்பாணத்துடன் இரட்டை உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு இடம் பெற்றது. அங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனைக் கூறினார்.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிங்ஸ்டனுக்கு இடையிலான இந்த உடன் படிக்கையானதுசமூக,பொருளாதார,மருத்துவம் மற்றும் கல்வி தொடர்பிலான அபிவிருத்தியை குறிப்பதே ஆகும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் மற்றும் வடக்கு மாகாண சபை முதல்வர் என்ற ரீதியில் சீ.வி விக்னேஸ்வரன் குறித்து தாம் மிகவும் பெருமையடைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வடக்கு மாகாணத்தில் இடம் பெற்ற மாகாண சபை தேர்தலில் விக்னேஸ்வரன் போட்டியிட்டு முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.
மேலும் முக்கியமான விடயம் ஒன்று பற்றி கூறி விரும்புகின்றேன். பிரித்தானியாவின் முன்னாள்பிரதமர் டேவிட் கமரூன் நவம்பர் 23 ஆம் திகதி யாழ்ப்பாணம் சென்று, விக்னேஸ்வரனை சந்தித்து நல்லிணக்கம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த விடயமானது இலங்கைக்கும் கிங்ஸ்டனுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும்அத்திவாரமாக இருப்பதாகவும் கிங்ஸ்டன் மாநகர சபை உறுப்பினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.