BMW i8 Roadster எப்போது சந்தைக்கு வருகின்றது? இதோ வெளியானது தகவல்!
இருந்த போதிலும் BMW நிறுவனத்தின் கார்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு.
இந் நிறுவனம் புதிதாக BMW i8 Roadster எனும் காரை வடிவமைத்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலை இவ் வருடம் ஜனவரி மாதத்தில் வெளியிட்டிருந்தது.
அந் நிறுவனம் குறித்த காரின் புகைப்படங்கள் மற்றும் சில சிறப்பம்சங்களை வெளியிட்டிருந்த நிலையில் கார் பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது.
இந் நிலையில் இக் கார் எப்போது சந்தைக்கு வருகின்றது என்ற தகவலை BMW நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Harald Krueger வெளியிட்டுள்ளார்.
இதன்படி 2018ம் ஆண்டு 2018ம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் சிறப்பம்சங்களாக 420 குதிரை வலு, 1.5 L 3 சிலின்டர், என்பன காணப்படுவதுடன் முதன் முறையாக 14.2 kWh இலிதியம் அயன் மின்கலம் இணைக்கப்படுகின்றமையும் காணப்படுகின்றது.
மேலும் இதன் விலையானது 110,000 பவுண்ட் ஆக காணப்படுகின்றது.