நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரர்: ரொனால்டோ என்ன செய்தார் தெரியுமா?
உலக கால்பந்து அரங்கில் சிறந்த வீரர்களில் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் ரொனால்டோவும் ஒருவர். விளையாட்டு துறையில் மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு உதவும் பண்பும் இவரிடம் அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பச்சைகுத்திக் கொண்டால் ரத்ததானம் செய்ய முடியாது என்பதற்காக தன்னுடைய உடம்பில் பச்சை குத்தாமல் இருக்கிறார்.
அண்மையில் போலாந்தில் நடைபெற்ற கால்பந்து போட்டிக்கான தொடரில் ரியல்மாட்ரிக் அணிக்காக விளையாடுவதற்காக ரொனால்டோ சென்றிருந்தார். அப்போட்டியில் ரியல்மாட்ரிக் அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அங்கே மூன்று முறை Ballon d”Or வெற்றியாளரும் கால்பந்து ஜாம்பவனுமான Fernando Ricksen ஐ சந்தித்துள்ளார். கால்பந்து உலகில் கொடிக்கட்டிப் பறந்த Fernando Ricksen கடந்த 2013 ஆண்டு நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் எழுந்து நடக்க முடியாது என கூறப்படுகிறது.
அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ரொனால்டோ சாம்பியன் லீக் போட்டியில் வெற்றி பெற்ற போது எந்த டீசர்ட் அணிந்திருந்தாரோ, அதை அவருக்கு பரிசாக கொடுத்து கெளரவப்படுத்தினார். அந்த டீசர்ட் அவருடைய Lucky டீசர்ட் எனவும் கூறப்படுகிறது.
அவரை சந்தித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ தன் குடும்பத்தாருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இது தன்னுடைய வாழ்வில் மிகவும் மறக்க முடியாத தருணம் என்றும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.