ஆர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
இவருக்கு பின் வந்த சிவகார்த்திகேயன் எல்லாம் தற்போது வேறு லெவலுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இவர் தற்போது கடம்பன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படியே நடித்தால் வேலைக்கு ஆகாது, கொஞ்சம் வில்லனாக நடித்தால் விட்ட மார்க்கெட்டை பிடித்துவிடலாம் என்று எண்ணியுள்ளார்.
அதற்காக விஷால் படத்தில் வில்லனாக நடிக்கப்போக, மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இவரை வில்லனாக நடிக்க அழைக்கிறார்களாம்.
ஹீரோவாகவே பாஸ் என்கின்ற பாஸ்கரன், மதுராசப்பட்டிணம், ராஜா ராணி என மெகா ஹிட் படங்களை கொடுத்த ஆர்யாவிற்கு இப்படி நிலைமையா? என அவர் மட்டும் இல்லை ரசிகர்களும் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள்.