இலங்கையின் அனைத்து சமூகங்களும் மறுப்பின் அடிப்படையிலான பொய்யை அடிப்படையாக கொண்டு வாழ்வதை நிறுத்தவேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடும் எதிர்ப்பு இன்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
தீர்மானத்திற்கு ஆதரவாக பாரம்பரியமாக வாக்களித்திருக்க கூடிய நாடுகள் பல இலங்கையின் நிலவரத்தின் தீவிரதன்மைiயை உணர்ந்து வாக்கெடுப்பை தவிர்க்கதீர்மானத்தை திருப்தியளிக்கின்றது எனவும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாரதூரமான விதத்தில் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களிற்கு- தசாப்தகாலமாக நீதி மறுக்கப்பட்ட மக்களிற்கு நீதியை நிலைநாட்டும் செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலானவையாக காணப்பட்டாலும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் நம்பிக்கையை அளிப்பதாக காணப்படுகின்றது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு காரணமான மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் பிரிட்டன் தலைமையிலான இலங்கை தொடர்பான முதன்மை நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களித்த அல்லது இணை அனுசரணை வழங்கிய நாடுகள் இந்த நோக்கத்திற்காக குரல்கொடுத்த மனித உரிமை அமைப்புகள் மிக முக்கியமாக நீண்டகாலம் கடந்துள்ள போதிலும் ஆபத்துக்கள் உள்ள போதிலும் பொறுப்புக்கூறலிற்காக துணிச்சலுடன் போராடுவதன் மூலம் தொடர்ந்தும் உத்வேகத்தை அளித்து வருகின்ற இலங்கையில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைத்து முற்போக்கு சக்திகளிற்கும் நன்றியை தெரிவிப்பதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இலங்கை யுத்தகால பொறுப்புக்கூறலிற்கு தீர்வை காண்பதில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றது, தகவல்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல் ஒருங்கிணைத்தல் பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால பொறுப்புக்கூறல்கள் செயல்முறைகளுக்கான உத்திகளை உருவாக்குதல்ஆகியவற்றிற்கான மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆணையை விஸ்தரிப்பதுடன் திறனை வலுப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சாத்தியப்பாடுகளில் உலகளாவிய அதிகார வரம்பு சர்வதேச நியாயாதிக்கம் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக தடைகளை விதித்தல் ஆகிய சாத்தியப்பாடுகளை உள்ளடக்கியுள்ளது என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இந்தியா வாக்களிக்கப்பதை தவிர்த்துள்ள போதிலும் தமிழ் மக்களின் நீதி சமாதானம் கௌவரம் சமத்துவம் ஆகியவற்றிற்கான வலுவான அறிக்கை குறித்து நாங்கள் திருப்தியடைகின்றோம் என தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவை 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த போதாமைகளை இந்தியா அங்கீகரித்துள்ளது மாகாணசபைகளிற்கு கூடிய விரைவில் தேர்தலை நடத்துவது அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு குறித்து ஆகியவற்றிற்காக அழைப்பு விடுத்துள்ளது,
பொருளாதார நெருக்கடிகளின் போது முன்னொரு போதும் இல்லாத உதவியை வழங்கிய வாக்கெடுப்பை தவிர்த்துக்கொண்ட இந்தியாவின் நல்லெண்ணத்தை தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் பொருளாதார அபிலாசைகளை பாதுகாப்பதற்காக ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தவேண்டும்.