காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் இன்று காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம ரயில் நிலையத்துக்கு இடையே தடம்புரண்டுள்ளது.
இதனால் தண்டவாளத்தின் 150 மீற்றர் நீளத்திற்கு கொங்கிறீட் சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன.
ரயிலின் முன்பக்க இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்குப் புகையிரத பாதையில் புகையிரதத்தின் இயக்கம் தடைப்பட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்புப் பொருட்கள் இன்மையால் புகையிரதங்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரிக்குமென துறைசார் அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் சில இடங்களில் புகையிரதங்கள் தடம்புரளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.