பெரும் பரபரப்பு மற்றும் ஆரவாரங்களுக்கு மத்தியில், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பாகம் 01 இறுதியாக உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
ஏனைய திரைப்படங்களை போன்று பொன்னியின் செல்வன் பாகம் 01 திரைப்படத்திற்கும் பவ்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எனினும், இந்த திரைப்படம் தமிழர் வரலாற்றை அனைவரின் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிட்டது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
திரைப்படத்தை திரையிடுவது தொடர்பில் சர்ச்சை
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் 01 திரைப்படத்தை திரையிடுவது தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்றை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள திரையரங்கு ஒன்றில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிடப்பட இருப்பதையொட்டி, அந்த திரையரங்குக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அந்த திரையரங்கு குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரியான Jeff Knoll என்பவர், டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவில், “பொன்னியின் செல்வன் திரைப்படம் Film.Ca Cinemas என்ற திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில், குறித்த திரையரங்கு குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்
இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வார இறுதி நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் Film.Ca Cinemas திரையரங்குக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எங்கள் வேலையை எப்படி செய்வது, என்ன படத்தை வெளியிடுவது, என்ன மொழி படங்களை வெளியிடுவது என எங்களுக்குச் சொல்ல விரும்பும் சட்ட விரோதிகளின் மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் அடிபணியப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
இதேவேளை தமிழோ, ஆங்கிலமோ, எந்த மொழித் திரைப்படமானாலும் சரி, யார் திரைப்படங்களை பார்க்க வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் கூறியுள்ளார்.