பாக்கிஸ்தானில் பொலிஸார் ஆளணி உபகரண தட்டுப்பாட்டை எதிர்கொள்வதால் பாதுகாப்பு நிலைமை கேள்விக்குறியாகும் நிலையேற்பட்டுள்ளது.
இஸ்லாமபாத்தில் உருவாகக்கூடிய பாதுகாப்பு நிலைமையை கையாள்வதற்கான ஆளணி உபகரண தட்டுப்பாட்டை இஸ்லாமபாத் பொலிஸார் எதிர்கொள்வதால் ஷாபாஸ் ஷெரீவ் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாதுகாப்பு குறித்த கரிசனைகள் தோன்றியுள்ளன.
தலைநகர பொலிஸார் ஆளணி உபகரண தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர் 25 பொலிஸ் நிலையங்களில் இந்த நிலைமை காணப்படுகின்றது என டோவ்ன் தெரிவித்துள்ளது.
25 பொலிஸ் நிலையங்களில் 9 பொலிஸ் நிலையங்கள் உரிய பலமின்றி காணப்படுகின்றன, ஆளணிகளிற்காக அவர்கள் ஏனைய பொலிஸ்நிலையங்களை நம்பியிருக்கவேண்டியுள்ளது என டோவ்ன் தெரிவித்துள்ளது.
ஆகிய பகுதிகளில் உள்ள பொலிஸ்நிலையங்களே இந்த நிலையில் காணப்படுகின்றன.
நகரப்பகுதியில் உள்ள ஏழுக்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களில் பொலிஸாரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது சட்டமொழுங்கை பேணுவதற்கு 669 பொலிஸார் தேவைப்படுகின்ற போதிலும் 408 பேரே உள்ளனர் என டோவ்ன் தெரிவித்துள்ளது.
இஸ்லாமபாத்தின் கிராமப்குதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களிலும் இதேநிலை காணப்படுகின்றது 406 பொலிஸார் தேவைப்படுகின்ற போதிலும் 368 பேரே கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
கைத்தொழில்பேட்டையில் உள்ள இரண்டு பொலிஸ்நிலையங்களில் 300 பேர் கடமையாற்றவேண்டியுள்ள போதிலும்250 பேரே பணியுள்ளனர்.
இதேவேளை பொலிஸார் மீதான தாக்குதல் அதிகரிப்பதாகவும் பல ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கைபரில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரிப்பது இதில் பல பொலிஸார் கொல்லப்படுவது குறித்து பெசாவரின் தலைநகர பொலிஸ் தலைவர் எஜாஜ் கான் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
சமீப நாட்களில் பாக்கிஸ்தானில் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.