இசைக்கருவிகள் தனது இசையால் எல்லோரையும் வசீகரிக்கும் வீணையோ, தன்னுடைய தனித்துவமான அழகிய தோற்றத்தால் நம் மனதை வசீகரிக்கிறது.
இந்திய மத்திய அரசு கலைப் பொக்கிஷமான வீணைக்கு புவிசார் குறியீடு வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 14 தொன் எடையுள்ள 40 அடி வீணை சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலை பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை மோடி இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
” மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். எண்ணற்ற முறை அவரிடம் உரையாடி உள்ளேன். அப்போதெல்லாம் அவர் அன்பு மழை பொழிவார். நினைவுகூர்வதற்கு பல விசயங்கள் உள்ளன. அவரது பெயரில் அயோத்தியாவில் உள்ள சாலை ஒன்றுக்கு அவரது பெயர் இன்று சூட்டப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தியாவின் சிறந்த அடையாள சின்னங்களில் ஒருவரான அவருக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாக அது இருக்கும் என்று அவர் தெரிவித்து உள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.