இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையில் டோக்கியோவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிநிகழ்வின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய இலங்கை தலைவர்கள் மத்தியிலான சந்திப்பு பத்து நிமிடங்கள் இடம்பெற்றது என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமைக்காக ரணில்விக்கிரமசிங்கவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்,இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என தெரிவித்துள்ளன.
நரேந்திரமோடியும் ரணில்விக்கிரமசி;ங்கவிற்கும் கடன் மறுசீரமைப்பு குறித்தும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிடமிருந்து அதிக முதலீடுகளை கோரினார்,இதற்கு சாதகமாக பதிலளித்துள்ள இந்திய பிரதமர்; தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுவதற்காக இந்தியா முதலீடுகளை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.