கனவு நனவாகிறது:ஹலிவக்ஸ் பையனின் லான்காஸ்டர் குண்டு வெடிப்பு விமான சவாவரி!
கனடா-நோவ ஸ்கோசியாவை சேர்ந்த யுஆன் மக்டொனால்ட் பரந்த புன்னகை ஒன்றுடனும் வியத்தகு சலூட் ஒன்றுடனும் தனது கனவை நனவாக்க படிக்கட்டுகளில் ஏறி இரண்டாம் உலகப்போர் காலத்தின் லான்ட்காஸ்டர் குண்டுவெடிக்கும் விமானத்தில் ஏறினான்.
ஹமில்டனில் ஒப்படைக்கப்பட்டிருந்த அவ்ரோ லான்ட்காஸ்டரில் பறக்கும் இவனது கனவு சனிக்கிழமை இணையத்தளம் மூலம் சேர்த்த பணத்தினால் நிறைவேறியது.
11-வயதுடைய இப்பையன் GoFundMe ஒன்றை இந்த வருடம் ஆரம்பித்தான். லான்ட்காஸ்டரில் சவாரி செய்ய தேவையான 3,500டொலர்கள் தேவைப்பட்டது.
உலகில் இன்னமும் பறந்து கொண்டிருக்கும் இரண்டில் ஒன்றான லான்ட்காஸ்டரில் பறப்பதற்கு அனேகமான மக்கள் இவனுக்கு உதவினர்.
விமானம் ஜோன் சி.முன்றோ ஹமில்ரன் சர்வதேச விமான நிலைய மவுன்ட் ஹோப்பிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் 2மணிக்கு புறப்பட்டு ரொறொன்ரோ வானலைகள் மூலம் நயாகரா நீர்வீழ்ச்சி வரை சென்று திரும்பியது. மொத்தமாக கிட்டத்தட்ட ஒரு மணித்தியால பயணம்.
இன்று வரை நிலைத்திருக்கும் உலகபோர் கால இரண்டு குண்டுவெடிப்பு விமானங்கள் ஒன்றில் பறப்பது எவ்வாறு இருக்கும் என அறிய விரும்பியதாக தெரிவித்தான்.
ஹமில்ரனின் கனடிய போர்விமான பாரம்பரிய மியுசியத்தில் உலகின் கடைசி இரண்டு அவ்ரோ லான்ட்காஸ்டர் விமானமும் இன்னமும் பறக்கும் நிலையில் உள்ளன.
நூற்றுக்கணக்கான லான்ட்காஸ்டர்கள் இரண்டாவது உலகபோரின் போது பயங்கர குண்டு வீச்சு தாக்குதல்களிற்காக ஐரோப்பா அனுப்பபட்டன. குறைந்த அளவிலான குழுவினரே உயிர் தப்ப வாய்ப்பேற் பட்டதாக கூறப்படுகின்றது.