ரஷ்ய இராணுவத்தை அணி திரட்டவும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார்.
மொஸ்கோ, ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவின்பேரில் கடந்த மார்ச் 24-ம் திகதியன்று உக்ரேனில் தொடங்கிய போரானது, முடிவு ஏதும் எட்டப்படாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
உக்ரேனும் தாக்குப்பிடித்து ரஷ்யாவை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவத்தை அணிதிரட்டல் தொடர்பான கோப்புகளை கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இராணுவத்தை அணிதிரட்டலை அறிவித்தார்.
மேற்கு எல்லை கடந்துவிட்டது. ரஷ்யாவை பலவீனப்படுத்தவும், பிரிக்கவும், அழிக்கவும் மேற்கத்திய நாடுகள் முடிவு எடுத்துள்ளது.
ரஷ்யாவை பலவீனப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்கின்றன. பதிலடி கொடுக்க எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளது.
தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும். ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.