ஆப்கானிஸ்தானுடன் சிறந்த வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்வதற்காக சீனா தலிபானை ஊக்குவிக்கின்றது.
ஆப்கானிஸ்தானுடன் சிறந்த வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்ளும் நோக்கில் , சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தலிபானை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.
வர்த்தக நோக்கத்துடன் சீனா தலிபானிற்கு போக்குவரத்து தடைகளில் இருந்து விலக்களித்து வருவதுடன் பொருளாதார மனிதாபிமான நெருக்கடியில் சி;க்கியுள்ள ஆப்கானிற்கும் உதவுகின்றது என அல் அரேபியா தெரிவி;த்துள்ளது.
தலிபான் ஆட்சியாளர்களிற்கு ஊக்குவித்து ஆதரவளிப்பதற்கான சீனாவின் சமீபத்தைய நடவடிக்கைகள் ஆப்கானில் உள்ள அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு சீனா தயாராகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளன.
தலிபானை சர்வதேச சமூகம் ஆதரிப்பதற்கான சூழலை உருவாக்கிவரும் சீனா தலிபான் தலைவர்களிற்கு எதிரான பயண தடைகளில் இருந்து அவர்களிற்கு விலக்களித்து வருகின்றது.
அதேவேளை ஆப்கானில் அகலக்கால் பதிப்பதற்காக வர்த்தகம் கலாச்சார இராஜதந்திர நடவடிக்கைகள் என்பதை விட அதிகமான நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டுள்ளது.
புதிய தலிபான் ஆட்சியாளர்கள் பாதுகாப்பு விவகாரங்களை ஒரளவு சிறந்த விதத்தில்கையாண்டுள்ளனர் என தெரிவிக்கும் தொடர்ச்சியான பிரச்சாரத்தில் சீன அரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன,என தெரிவிக்கும் அல் அராபியா ஆப்கானிஸ்தானில் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் சீன ஊடகங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பொருளாதார செழிப்பை ஏற்படுத்துவதில் சீனாவும் அதன் நிறுவனங்களும் ஆற்றிவரும் பங்களிப்பை சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டிவருகின்றன வர்த்தக நடவடிக்கைகளும் கலாச்சார இராஜதந்திரமும் சீனா தலிபானை அங்கீகரிக்க தயாராகின்றது என்பதை புலப்படுத்தியுள்ளன.
தலிபான் சிறந்தது என்ற இந்த பிரச்சாரத்தின் முன்னணியில் சீனாவின் கம்யுனிச கட்சியின் ஊதுகுழலான குளோபல் டைம்ஸ் காணப்படுகின்றது . இந்த ஊடகம் அதன் தலைமை ஆசிரியர் ஹியு ஜிஜினின் தலைமையின் கீழ் ஓநாய் போர்வீரன் தொடர்பாடல் மூலோபாயத்தை பயன்படுத்துகின்றது.
தலிபான் ஆட்சியை கைப்பற்றியது முதல் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலவரம் முன்னேற்றமடைந்துள்ளது வன்முறைகள் குறைவடைந்துள்ளன என ஆப்கான் மக்கள் தெரிவிக்கின்றனர் என்ற செய்தியை இந்த ஊடகம் பரப்புகின்றது.
எனினும் தலிபானின் ஆட்சி முறையில் இன்னமும் பழங்குடி கலாச்சாரத்தின் ஆதிக்கம் அதிகமாக காணப்படுகின்றது என அந்த ஊடகம் தெரிவிக்கின்றது.அதேவேளை தலிபானின் நிர்வாக திறன் ஒப்பீட்டளவில் அதிகளவு முன்னேற்றகரமானவையாக காணப்படுகின்றன எனவும் அந்த ஊடகம் தெரிவிக்கி;ன்றது.
சில ஊடகங்கள் சீனாவின் முதலீடுகள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களில் சில முன்னேற்றம் ஏற்படுகின்றன என குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ விலக்களிற்கு பின்னரும் போன்ற சீன வர்த்தகர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்த சீன வர்த்தகர்கள் நன்மையடைந்துள்ளனர்.
அவரிடம் நான்கு இரும்பு தொழிற்சாலைகள் உள்ளன என அல் அராபியா தெரிவிக்கின்றது.
சீனாவின் வர்த்தக நடவடிக்கைகளின் தளமாக சீனா டவுன் என்ற பத்து மாடி கட்டிடம் காணப்படுகின்றது . மேலும் சீனா ஆப்கான் கூட்டுமுயற்சியாக 216 மில்லியன் டொலரில் காபுலின் புறநகர் பகுதியில் கைத்தொழில் பேட்டையொன்று உருவாகின்றது.
சீனா பாக்கிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை ஆப்கானிஸ்தானிற்கும் அதற்கு அப்பாலும் விஸ்தரிப்பது குறித்த பேச்சுக்களும்காணப்படுகின்றன.
ஆப்கானிலிருந்து கொள்வனவு செய்யும் பொருட்களிற்கு சீனா 98 வீத வரிவிலக்கலை அறிவித்துள்ளது.
அய்னாக் செம்பு சுரங்கத்தில் அகழ்வு நடவடிக்கைகளை சீனாவின் மெட்டார்லஜிகள் குழுமம் நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
ஆப்கானின் மிகப்பெரிய செம்பு சுரங்க திட்டம் இது.
தற்போது சீனாவின் பொருளாதார தடம் ஆப்கானிஸ்தானில் நிதானமாக விஸ்தரிக்கப்படுகின்றது என அல் அராபியா தெரிவிக்கின்றது.
காபுலில் தனது நடவடிக்கைகள் வழமை போல தொடர்வதை உறுதி செய்வதற்காக சீனாபெண்கள் உரிமை பற்றி கருத்து கூறுவதை தவிர்க்கின்றது.
மேலும்ஆப்கானின் மகளிர் சிறுமிகளிற்கான கல்வி உரிமை குறித்த மனித உரிமை ஆர்வலர்களின் பிரச்சாரங்களில் இருந்தும் தன்னை சீனா தனிமைப்படுத்திக்கொண்டுள்ளது.
சீனா தனது கலாச்சார இராஜதந்திரத்தையும் முன்னெடுக்கின்றது.