கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்
வெனிசுலாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Táchira Detention Center எனப்படும் சிறையில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கு கொள்ளை சம்பவம் ஒன்றில் தொடர்புடைய கைதி ஜுவான் கார்லோஸ்(25) சிறை வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் 8-ஆம் திகதி பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் என 10 நபர்களை சிறைக் கைதிகளில் சிலர் சிறை பிடித்துள்ளனர். குறிப்பிட்ட சிறையானது வெறும் 120 கைதிகள் மட்டுமே தங்கவைக்க கூடிய வசதிகளுடன் கூடியது. ஆனால் குறித்த சிறையில் 350 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.
காவலர்கள் மற்றும் பார்வையளர்களை கடத்திச் சென்ற கும்பலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் திடீரென்று கலவரம் வெடித்தது. 3 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்த கலவரத்தில் மனித மாம்சம் உண்ணும் ஒரு கைதியால் ஜுவான் கார்லோஸ் கொல்லப்பட்டு உடல் சிதைக்கப்பட்டு உணவாக்கப்பட்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
மனித மாமிசம் சாப்பிடும் நபர் ஒருவரை கடந்த 1999 ஆம் ஆண்டு குறித்த சிறையில் அடைத்து வைத்திருந்தனர். கலவரத்தை பயன்படுத்திய அந்த நபர் மேலும் 40 சக கைதிகளுடன் இணைந்து ஜுவான் கார்லோஸ் உள்ளிட்ட 3 பேரை சிறைக்குள் வேறொரு பகுதிக்கு கடத்தி சென்றுள்ளனர்.
அந்த பகுதியில் வைத்து ஜுவான் உள்ளிட்ட 3 பேரையும் கொன்று உணவாக்கியுள்ளனர்.
இச்சம்பவங்களை நேரில் பார்த்த நபர் ஒருவர் இதை ஜுவானின் தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதே சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜுவானின் தந்தை தமது மகனின் எலும்பு துண்டையாவது தமக்கு அளித்தால் அதை வைத்து மத சடங்குகளை மேற்கொள்வேன் என கோரிக்கை விடுத்துள்ள போதிலும், அதிகாரிகளால் இதுவரை அவைகளை மீட்டுத்தர முடியவில்லை.
ஒரு காலத்தில் எண்ணெய் வளம் மிகுந்த நாடாக திகழ்ந்த வெனிசுலா தற்போது பொருளாதார வீழ்ச்சியில் சிக்குண்டு, அடிப்படை உணவுக்கும் பொருட்களுக்கும் பொதுமக்கள் கலவரம் செய்யும் நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.