பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கி 3-வது சூறாவளி?
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியா, வன்கூவர் ஐலன்ட் மற்றும் தென் கரையோரப்பகுதியில் இரண்டு நாட்கள் அனர்த்தம் விளைவித்த சூறாவளி இன்னமும் அப்பகுதிகளை விட்டு அகலாது என அறியப்படுகின்றது.
Super Typhoon Songda எனப்படும் இந்த சூறாவளியின் எச்ச சொச்சங்கள் சனிக்கிழமை பிற்பகலும் தொடர உள்ளது. மணித்தியாலத்திற்கு 90-கிலோ மீற்றர்கள் வேகத்தில் வன்காற்று உருவாகுவதுடன் பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்கள் தாக்கிய சூறாவளியால் 75,000ற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை சுறாவளியினால் முறிந்து விழுந்த மரம் ஒன்று சறே, B.C பாடசாலையில் 15-வயது மாணவன் ஒருவனின் மேல் விழுந்ததால் கொல்லப்பட்டான்.
808 total views, 144 views today