அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்கான கற்பித்தல் செயற்பாடுகள் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
கொவிட் தொற்று மற்றும் எரிபொருள் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடசாலைகளுக்கு அதிகளவில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன.
எனவே இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை காலத்தை மட்டுப்படுத்துவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.