கற்பிட்டி தேத்தாவாடிய பகுதியில் தோட்டமொன்றில் அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கடற்சிப்பிகளை அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 5636 கிலோ கடற்சிப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 35 வயதுடைய கற்பிட்டிப் பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்சிப்பிகளினால் கோழிகளுக்கான உணவுகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அலங்கார பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்தப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட கடற்சிப்பிகள் கற்பிட்டி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இதன்போது தெரிவித்தனர்.