நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு உக்கிரமடைந்து இருந்தது. இந்நிலையில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்குச் சொந்தமான சுமார் 208 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
தகவல்களின் அடிப்படையில் கடந்த மே 27 முதல் இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி சூழ்நிலை நிலவி வருகிறது.இதன் காரணமாக விமான போக்குவரத்துகளை மேற்கொள்வதற்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கும் தொழிநுட்ப தரையிறக்கத்திற்காவும் இலங்கையில் இருந்து 208 விமானங்கள் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன .
இவற்றில் 130 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கும் ஏனையவை திருத்த வேலைக்காகவும் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு தரையிறங்கும் ஒரு விமானத்திற்கான கட்டணமாக 1.5 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் .இது எரிபொருள் நிரப்பும் வருவாய் தவிர்ந்த மேலதிக வருமானம் எனவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் 4 விமானங்களும் அதாவது மெல்பேர்ன், சிட்னி மற்றும் பாரிஸூக்கு சென்ற மூன்று விமானங்களும் , ஷார்ஜாவிற்கு சென்ற ஏர் அரேபியா விமானம் திருவனந்தபுரத்தில் எரிபொருளை நிரப்பியுள்ளன.
இதேவேளை அண்மைக் காலத்தில் கொழும்பில் இருந்து வரும் விமானங்கள் தொழில்நுட்ப தரையிறக்கத்திற்கும் எரிபொருள் நிரப்புவதற்கும் கொச்சி விமான நிலையத்தையும் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருவாய் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றுள்ளதாக இந்திய ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.