ஜம்முகாஸ்மீரி;ல் பயங்கரவாதத்தி;ற்கு நிதியுஉதவி செய்வதற்கு பாக்கிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐ பிட்கொய்னை பின்பற்றுவதை இந்தியாவி;ன் எஸ்ஐஏ புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
காஸ்மீரின் வடக்கில் உள்ள பாரமுல்லா குப்வார் மாவட்டங்களிலும் ஜம்முவின் பூஞ்சிலும் சிஆர்பிஎவ் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் ஐஎஸ்ஐ பிரிவினர் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இந்த பகுதியில் ஏழு வீடுகளை சோதனையிட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
பிட்கொயினை பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதற்காக பயன்படுத்துவது தொடர்பான விவகாரம் இது என தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் விசாரணைகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன பாக்கிஸ்தான் புலனாய்வு பிரிவினருடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரியொருவர் பயங்கரவாத அமைப்புகளின் துணையுடன் பாக்கிஸ்தானிலிருந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய சூத்திரதாரியை முழுமையாக இனம் கண்டுள்ளோம் அவருடன் தொடர்புடைய ஏனையவர்கள் உசார் அடைவதை தடுப்பதற்காக அந்த நபர் குறித்த விபரங்களை இரகசியமாக வைத்துள்ளோம் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குப்வாராவின் ஜஹிடா பானோ உட்பட பல பகுதிகளில் அவர்கள் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.
பாக்கிஸ்தானில் இருந்துவரும் கள்ளப்பணம் இந்த நபர்களை சென்றடைந்துள்ளது என்பதை ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் அறியமுடிந்துள்ளது பணம் அனுப்பப்பட்ட விதத்தை கண்டுபிடிப்பதை கண்டுபிடிக்க முடியாத விதத்தில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச பிட்கொய்ன் வர்த்தகத்தில் காணப்படும் பலவீனங்களை பயன்படுத்தியே இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது டிஜிட்டல் சாதனங்கள் சிம்கார்ட்கள் மொபைல் போன்களில் காணப்பட்ட விசாரணைகளுடன் தொடர்புபட்ட பல தகவல்கள் மீட்கப்பட்டுள்ளன.