ரொறொன்ரோ வரலாற்றில் “மிக பாரிய ஒற்றை” பறிமுதல்!
கனடா- 7.3-மில்லியன் டொலர்கள் பெறுமதியான கொக்கெயின் ரொறொன்ரோ பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. போலர் திட்டம் என பெயரிடப்பட்ட போதை பொருள் பறிமுதல் திட்டத்தின் கீழ் இப்பறிமுதல் இடம்பெற்றதுடன் பொலிசார் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 17-கிலோகிராம்ஸ் போதை மருந்துகள் பிக் அப் டிரக் ஒன்றிற்குள் இருந்து வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.
மொத்தமாக 73-கிலோ கிராம்ஸ் கொக்கெயின், 12-கிலோகிராம்ஸ் கிறிஸ்டல் மெத் மற்றும் எட்டு கிலோகிராம் எகஸ்ரசி–8.9மில்லியன் டொலர்கள் மொத்த பெறுமதியுடைய–கைப்பற்றப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ வரலாற்றிலேயே இது மிகப்பெரிய கைப்பற்றுகை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
32வயதுடைய நிக்கொலஸ் ஷோல்டைஸ் யங்வீதி மற்றம் செப்பேர்ட் அவெனியுவிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டார்.