மன்னன் இராவணன் தீவிரவாதி-இந்திய பிரதமரின் கூற்றால் சர்ச்சை
மன்னன் இராவணன் ஒரு தீவிரவாதி என இந்திய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
லக்னோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் துஷேரா நிகழ்வு என்பது, இராவணனுக்கு எதிராக போர் செய்த ராமரின் வெற்றியை குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் நிகழ்வாகும்.
அந்த நிகழ்வின் போது தமிழ் மன்னன் இராவணனை “தீவிரவாதி” என நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தீவிரவாதத்திற்கு எதிராக உலகின் முதலாவது போரின் போது ராமர் இராவணனை தோல்வியடைய செய்தார் என இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வருடமும் இந்து மதத்தினர் இராவணனின் உருவத்தை தீயிட்டு அழிப்பதற்கு காரணம், இராவணன் இந்துக்களின் மனதிலிருந்து அழிக்கப்பட்டுள்ளார் என்பதை உணர்த்தவே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கூற்றுக்கு இராவண சக்தி என்ற அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இராவணன் ஒரு தீவிரவாதி என எந்த வரலாற்று சான்றிலும் குறிப்பிடப்படவில்லை என அந்த அமைப்பின் செயலாளர் துலிப் சன்ஞய தெரிவித்துள்ளார்.