எரிபொருள் பற்றாக்குறை, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பாதிப்பு ஆகிய காரணிகளினால் எதிர்வரும் நாட்களில் 3 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் முதலாம் தொகுதி செயலிழிந்துள்ளதால் மின்விநியோகத்தை நிர்வகிக்க மேற்கு முனையம் மற்றும் ஏனைய எரிபொருள் மின்நிலையங்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 2 ஆவது மின்பிறப்பாக்கி தொகுதியில் திட்டமிட்ட பராமரிப்பு பணிகள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் 3அவது மின்பிறப்பாக்கி தொடர்ந்து இயங்கி வருகிறது.
முதலாவது மின்பிறப்பாக்கியின் தொழில்நுட்ப கோளாறு தொடர்பில் ஆராய உரிய நடவடிக்கை முன்னெடுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்நிலையம் ஊடாக தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் மின் இணைக்கப்படும் ஆனால் தற்போது 270 மெகாவாட் மின்னுற்பத்தி மாத்திரமே இணைக்கப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்படும் தொழினுட்ப கோளாறு ஆகிய காரணிகளினால் எதிர்வரும் நாட்களில் நாளாந்தம் 3 மணித்தியாலங்கள் மின்விநியோக தடையினை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் கிடைப்பனது சுமுகமான நிலையில் காணப்படுவதால் தற்போது நாளாந்தம் 1 மணித்தியாலம் அளவு மின்விநியோக தடை அமுல்படுத்தப்படுகிறது.
எரிபொருள் கிடைப்பனவில் பாதிப்பு ஏற்படுமாயின் நீண்ட மின்விநியோகத்தை அமுல்படுத்த நேரிடும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.