சீனாவின் யுவான் வான் -05 அறிவியல் மற்றும் கண்காணிப்பு கப்பல் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு இயங்கி முறைமையைப் பேணுதல் மற்றும் இலங்கை கடற்பரப்பில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள கூடாது என பாதுகாப்பு அமைச்சினால் விதிக்கப்பட்ட நிபந்தனை தெளிவுபடுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து 16-22 ஆகிய காலப்பகுதியில் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
யுவான் வான் -5 கப்பல் விவகாரம் குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுவான் வான்-05 அறிவியல் மற்றும் கண்காணிப்பு கப்பல் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்கும் என மக்கள் சீன கூட்டாட்சி கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் ஊடாக கடந்த ஜுன் மாதம் 28ஆம் திகதி வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிவித்தது.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இடையில் கப்பலி;ன் சேவையாளர்கள் சுழற்சி முறையில் மாற்றப்பட மாட்டார்கள் கொழும்பு தூதரகம் விடுத்த கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு சீனா கூட்டாட்சி வலியுறுத்தியுள்ளது.
இராஜாதாந்திர மட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை வெளிவிவகார அமைச்சு பாதுகாப்பு அமைச்சு,இலங்கை கடற்படை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கொண்டு சென்றது.
குறிப்பி;ட்ட காலப்பகுதியில் நிரப்பல் நடவடிக்கைகளுக்காக கப்பல் வருகை தருவதற்கான பாதுகாப்பு அனுமதி கடந்த ஜுலை மாதம் 07ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சிடமிருந்தும்,குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற அடிப்படைக்கு உட்பட்ட அதிர்வெண்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களை பயன்படுத்துவதற்கான தடையில்லா அனுமதியை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து,அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக விஜயம் செய்வதற்கான இராஜதந்திர அனுமதி கடந்த ஜுலை மாதம் 12ஆம் திகதி வெளிவிவகாரத்துறை அமைச்சினால் கொழும்பில் உள்ள சீன தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள அமைப்பு இயங்கி முறைமையைப் பேணுதல் மற்றும் இலங்கை கடற்பரப்பில் எந்த அறிவியல் ஆய்வுகளும் மேற்கொள்ள கூடாது என பாதுகாப்பு அமைச்சினால் விதி;க்கப்பட்ட நிபந்தனை தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட ஒருசில விடயங்களின் அடிப்படையில் யுவான் வான் 05 கப்பல் தொடர்பில் மேலதிக ஆலோசனைகள் மேற்கொள்ளும் வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கப்பலின் வருகையை ஒத்திவைக்கமாறு அரசாங்கம் கடந்த 05ஆம் திகதி இராஜதந்திர மட்டத்தில் சீன தூதரகத்திடம் கோரியது.
இந்த விடயத்தை நட்பு ரீதியாகஇ பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் மூலமாகஇ சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டுஇ அரசுகளின் இறையாண்மை சமத்துவக் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்க்கும் நோக்கில்இ சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இராஜதந்திர வழிகள் மூலமான உயர் மட்ட ஆலோசனைகளில் அரசாங்கம் விரிவாக ஈடுபட்டுள்ளது. எழுப்பப்பட்ட கவலைகளின் அடிப்படையில்இ அமைச்சு இந்த விடயத்தில் ஆலோசனைகளுக்கு உதவக்கூடிய மேலதிக தகவல்களையும்இ ஆவணங்களையும் கோரியது.
யுவான் வான் -05 கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய திட்டமிட்டிருந்தது.16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான காலப்பகுதியிலான புதிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக அனுமதி கோரி விண்ணப்பிடக்கப்பட்டுள்ளதாகவும்.இராஜதந்திர குறிப்பின் மூலம் சீன மக்கள் குடியரசின் தூதரகம் கடந்த 12ஆம் திகதி வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு அறிவித்திருந்தது.அனைத்து ஆவணங்களையும் கருத்திற்கொண்டு எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 22 வரையான காலப்பகுதியில் கப்பல் வருகை தருவதற்கான அனுமதி சீன தூதரகத்திற்கு கடந்த 13ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து நாடுகளுடனான இலங்கையின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்த வெளிவிவகாரத்துறை அமைச்சு விரும்புகிறது.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது.இலங்கையின் சர்வதேச கடமைகளுக்கு அமைவாக அனைத்து நாடுகளினதும் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதே வெளிவிவகாரத்துறை அமைச்சின் நோக்கமாகும்.தற்போது இக்கட்டான பொருளாதார சவால்களை எதிர்க்கொண்டுள்ள போது ஒத்துழைப்பு வழங்கியுள்ள சகல நாடுகளையும் அமைச்சு பாராட்டுகிறது.