உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சவால்களால் பிரசவம் என்பது உயிருக்கு ஆபத்தானதாகயிருக்கலாம்.
இலங்கையின் 2 மில்லியன் பெண்கள் யுவதிகளிற்கு உயிர்காக்கும் சுகாதார சேiவையை வழங்குவதற்காக 10.7 மில்லியன் அமெரிக்க டொலர் தேவை என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை சுதந்திரத்தின் பின்னர் மோசமான சமூக பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றது ஒருகாலத்தில் வலுவாக காணப்பட்ட இலங்கையின் சுகாதார சேவைகள் பலவீனப்படுத்தும் மின்பற்றாக்குறை மற்றும் முக்கியவிநியோகங்கள் சாதனங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் இன்மை காரணமாக வீழ்ச்சியின் விளிம்பில் தத்தளிக்கின்றன.
இது கர்ப்பிணிகள் மற்றும் கருத்தடைகள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதை பாதிக்கின்றது.
பாலியல் வன்முறையிலிருந்து தப்பியவர்கள் உட்பட பெண்கள் சிறுமிகளிற்கு தற்போது காணப்படும் பாதுகாப்பு பொறிமுறைகள் ஏற்கனவே பலவீனமடைந்துள்ளன .
2022 மே மாதத்தில் ஐநா மேற்கொண்ட ஆய்வுகள் பெண்கள் யுவதிகள் வன்முறையால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகரிப்பதை வெளிப்படுத்துகின்றன,அதேவேளை பொலிஸ் தங்குமிடம் அவசர உதவி அழைப்புகள் போன்றவை போதிய வசதியின்மையால் பாதிக்கப்படுகின்றன.
இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி பெண்கள் யுவதிகளின் சுகாதாரம் உரிமைகள் மற்றும் கௌரவத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நட்டலியா கனெம் தெரிவித்துள்ளார்.
அவர்களின் தனிப்பட்ட தேவைகளிற்கு பதிலளிப்பது மற்றும் உயிர்காக்கும் சுகாதார பாதுகாப்பு சேவைகளிற்கான அணுகலை பாதுகாப்பதாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல வருட கால முயற்சிகள் இலங்கை பெண்கள் யுவதிகளிற்கு நிலையான வெற்றிகளை கொண்டுவந்துள்ளது , 99 வீதமான பெண்கள் மருத்துவமனைகளிலேயே குழந்தைகளை பெற்றெடுக்கின்றனர்,ஆனால் இந்த சாதனைக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 215000 பெண்கள் கர்ப்பிணிகளாக காணப்படுகின்றனர்,இவர்களில் 11,000 பேர் யுவதிகள்,அடுத்த ஆறு மாதங்களில் 145,000 பெண்கள் குழந்தையை பெற்றெடுக்கவுள்ளனர்,கர்ப்பிணிப்பெண்களிற்கு சுகாதார வசதிகளை பெறுவதற்கான பணம் மற்றும் ஏனைய உதவிகளை ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியம் வழங்குகின்றது.
மேலும் நாடு முழுவதும் உள்ள தாதிமார்களின் திறன்களை உருவாக்குகின்றது ஆனால் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சவால்களால் பிரசவம் என்பது உயிருக்கு ஆபத்தானதாகயிருக்கலாம்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் முக்கியமான உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து ஐக்கியநாடுகள் சனத்தொகை நிதியம் உறுதிபூண்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடேனியி தெரிவித்தார்.
தற்போதைய நெருக்கடியின் நீண்டகால விளைவுகளை குறைப்பதற்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் பாலின அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் சேவைகளை வழங்குவதே எங்கள் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.