சர்வகட்சி அரசாங்கத்தில் இணையும் அனைத்து தரப்பினரும் தாராள மனப்பான்மையுடன் தியாயம் செய்பவர்களாக செயற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே அந்த அரசாங்கத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி குறித்து மகிந்த
உத்தேச சர்வகட்சி அரசாங்கத்தில் பல இடதுசாரி – வலதுசாரி மற்றும் மிதவாதி கட்சிகளும் உள்ளடங்குகின்றன.
இவ்வாறான கலப்பு அரசியல் திட்டத்தில் ஒவ்வொரு தரப்பினரும் தமது பெருமைகளை மறந்து நாட்டை தற்போதைய நெருக்கடியிலிருந்து காப்பாற்ற தியாகம் செய்ய வேண்டும்.
முன்னாள் பிரதமரின் கோரிக்கை
இல்லையேல் இந்த சர்வகட்சி அரசாங்கம் மற்றுமொரு பேச்சுக் கூடமாகவே இருக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.