சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள இலங்கையின முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூர் அரசு கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கையெழுத்து போராட்டம் இன்று சனிக்கிழமை யாழ் நல்லூர் தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபிக்கு முன்னால் ஆரம்பித்து வைத்தனர்.
எமது தாய் மண்ணில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட 2009 இனவழிப்பின் உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றின் சூத்திரதாரியாவார் இந்த இனப்படுகொலையாளனை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை செய்வதோடு எமக்கான நீதியை பெற்று தருமாறு கோருவதோடு சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்திருக்கும் இந்த கொடுங்கோலனை சிங்கப்பூர் அரசு கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் கையெழுத்து போராட்டம் இடம்;பெற்றுக் கொண்டிருக்கின்றது
எனவே இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக தமிழ்த்தேசிய பண்பாட்டுபேரவை நல்லூர் தியாக தீபம் திலீபன்; நினைவுத்தூபிக்கு முன்னாள் இந்த கையொழுத்து போராட்டத்தை இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த கையொழுத்து போராட்டம் தாயகத்தில் ஒவ்வொரு பிரதேசமாக ஒவ்வொரு நாளும் இடம்பெறும் எனவே இந்த போராட்டத்தில் தாகத்திலுள்ள ஒவ்வொரு குடீமகனின் கடமை என நினைத்து வேற்றுமைகளை மறந்து ஒரே இலட்சியத்திற்காக ஒன்றுபட்டு கையெழுத்திட அழைக்கின்றோம் என தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை தலைவர் எஸ். நிசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.