பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானத்தை போக்குவரத்து அமைச்சு மீளப்பெற வேண்டும்.தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்க வலுசக்தி அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டோம் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குறிப்பிட்டனர்.
தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.ஒரு சில தனியார் பேருந்துகள் நேற்றைய தினம் போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்டதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் விநியோகம் வரையறுக்கப்பட்ட நிலையில் தேவையான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது.
பேரூந்து கட்டணம் குறைக்கப்பட்டமை பொது பயணிகளுக்கு சாதகமாக அமைந்தாலும்,மறுபுறம் அது தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து அவதானம் செலுத்தாத காரணத்தினால் நேற்றைய தினம் ஒருசில சங்கத்தினர் சேவையில் ஈடுப்படுத்தவில்லை.
துனியார் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கு சொந்தமாக சுமார் 1500 பேரூந்துகள் நேற்றைய தினம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டன.எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சுமார் 10,000 பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்த முடியாத நிலையில் உள்ளன.ஆகவே எரிபொருள் பிரச்சினைக்கு வலுசக்தி அமைச்சு சிறந்த தீர்வை முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையினையும் முன்னெடுக்கவில்லை.எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது,ஆகவே கட்டணம் திருத்தம் தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தினர் குறிப்பிட்டனர்.