சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து எவ்விதமான அழைப்புக்களும் கிடைக்கவில்லை என்று சிறுபான்மை தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன.
இதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்ட நிலையில் நாட்டை நெருக்கடிகளிலிருந்து மீட்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
தொடர்ந்து ஆளும் தரப்பின் பிரதமகொரடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே சிறுபான்மையினங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளன. இதுதொடர்பில் அக்கட்சிகள் மேலும் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும்ரூபவ் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகையில், “கூட்டமைப்புக்கு தற்போதுவரையில் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் எவ்விதமான அழைப்புக்களும் கிடைக்கவில்லை. அவ்வாறான அழைப்புக்கள் உத்தியோக பூர்வமாக விடுக்கப்படும் பட்சத்தில் தமிழரசுக்கட்சியும்ரூபவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடி ஆராய்ந்து இறுதித் தீர்மானத்தினை எடுக்கும்” என்றார்.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்ரூபவ் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசனும், அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டதோடு, பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடியே தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அதேநேரம்ரூபவ் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் செயலாளர் நிஸாம் காரியப்பர், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளிவருகின்றபோதும் எமது கட்சிக்கு எந்த அழைப்பும் கிடைக்கவில்லை என்றார்.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்க்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் உள்ளகத்தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
விக்கி நிபந்தனை
இதேவேளை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன்ரூபவ் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்வதற்கு முன்னதாக, தமிழ் மக்கள் சார்ந்த முக்கிய விடயங்களை நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளேன். அந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிபலிப்பை அடுத்தே, எமது கட்சிக்குள் கலந்துரையாடி தீர்மானிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கஜேந்திரகுமார் தரப்பு ஒருபோதும் பங்கேற்காது அதேநேரம்ரூபவ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்ரூபவ் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்ரூபவ் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டாலோ இல்லையோ நாம் அதில் ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை. தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாக உள்ள காரணிகள் ஏற்றுக்கொள்ளாது ஏனைய விடயங்கள் பற்றி பேசுவதும்ரூபவ் ஒற்றாயட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது அவசியமில்லாத விடயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சர்வகட்சி அரசாங்கம் பற்றிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.