பல வாகனங்களைக் கொண்ட வணிக மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற்றுக்கொள்ள பதிவுகளை மேற்கொள்ள முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களையும் பதிவு செய்யலாம்.
அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் குறித்த டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.