பல வாகனங்களைக் கொண்ட வர்த்தக நிறுவனங்கள், எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் தமது வர்த்தகப் பதிவு இலக்கத்துடன் அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த இயந்திரங்களை அந்தந்த பிரதேச செயலாளர் காரியாலயங்களில் பதிவு செய்ய முடியும் எனவும், அதற்கான எரிபொருள் தேவைகள் வாரந்தோறும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு அதிகளவானோர் பதிவு
இதேவேளை, நேற்றிரவு 8.30 மணி வரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்த மொத்த பாவனையாளர்களின் எண்ணிக்கை 4.25 மில்லியன் என அமைச்சர் கூறுகிறார்.
இதேவேளை, நேற்றைய நிலவரப்படி 481 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
409 சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களும், 72 ஐஓசி நிரப்பு நிலையங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய எரிபொருள் உரிமத்தின் QR அமைப்பின் மூலம் 158,208 வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.