தீபாவளியில் வெற்றிக்கொடி நாட்டியவர்கள் யார் தெரியுமா? ஸ்பெஷல் ரிப்போர்ட்
பொதுவாக பண்டிகை காலங்களில் முக்கிய பிரபலங்களின் படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும். மற்ற இரண்டாம் நிலை நடிகர்களின் படங்கள் பொறுத்திருந்து தள்ளிப்போகும்.
தற்போது இந்த நிலை அப்படியே மாறிவிட்டது, பண்டிகையை குறிவைத்து எல்லா நடிகர்களின் படங்களும் களமிறங்க ஆரம்பித்து விட்டன.
அப்போதெல்லாம் ஒரு வருடம் ஒரு படம் ஓடினால் தான் சாதனை என்பார்கள். ஆனால் இப்போதோ அந்நிலைமாறி ஒரு வாரம் ஓடினாலே சாதனை என்கிறார்கள்.
அன்று எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் திரைப்படம் 1944 அக்டோபர் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி மூன்று வருட தீபாவளி கண்டு வரலாற்று முத்திரை பதித்தது.
சிவாஜி கணேசன்
அதுபோல சிவாஜி கணேசனின் பராசக்தி 1952 அக்டோபர் தீபாவளிக்கு வெளிவந்து 175 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
மேலும் ஊட்டிவரை உறவு, இருமலர்கள், நவராத்திரி மற்றும் எங்கிருந்தோ வந்தாள் என அவரின் முக்கிய படங்கள் தீபாவளியில் ரிலீஸ் ஆகி வெற்றி கண்டது.
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆருடைய எங்கவீட்டு பிள்ளை பிள்ளை 1965 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி சாதனை படைத்தது. மன்னாதி மன்னன், படகோட்டி போன்ற படங்களும் வெற்றி பெற்றன.
கமல்ஹாசன்
கமல்ஹாசனுடைய நாயகன் 1987 அக்டோபர் தீபாவளிக்கு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. மேலும் அவரின் சிகப்பு ரோஜாக்கள், தப்புதாளங்கள், மனிதரில் இத்தனை நிறங்களா, அபூர்வ சகோதரர்கள், குணா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது.
ரஜினி
ரஜினிக்கு தீபாவளிக்கு பல படங்கள் வெளியாகிருந்தாலும் தளபதி, முத்து, பாண்டியன், சிவா ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிவாகை சூடியது.
விஜய்
நடிகர் விஜய்க்கு ப்ரியமானவளே, ஷாஜகான், பகவதி, திருமலை, சிவகாசி, அழகிய தமிழ் மகன், துப்பாக்கி, வேலாயுதம் மற்றும் கத்தி ஆகிய படங்கள் தீபாவளி கண்டது.
அஜித்
அஜித்துக்கு ஆரம்பம், போன தீபாவளிக்கு வேதாளம் படம் வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்த தீபாவளிக்கு என்ன என்று ஓயாத பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதேபோல கார்த்தியின் அழகு ராஜா வெளிவந்து பெரும் தோல்வியை சந்தித்தது. விஷாலுக்கு பாண்டியநாடு ஆகிய படங்கள் தீபாவளிக்கு வந்தன.
வரும் அக்டோபர் 29ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கொடி, விஜய் ஆண்டனியின் சைத்தான், கார்த்தியின் காஷ்மோரா, ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
இதில் எந்த படம் பிளாக் பஸ்டர், சூப்பர் ஹிட், நல்லவசூல் என இடம் பிடிக்கபோகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆக இந்த தீபாவளி அசத்தல் தீபாவளிதான் போல!