இன்று சூரிய புயல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய புயல்களை பூமியின் காந்தபுலம் ஓரளவு தடுத்தாலும் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கடந்த சில நாட்களாக பூமியின் வளிமண்டலத்தை சக்திவாய்ந்த சூரிய புயல் தாக்க உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஜூலை 19 ஆம் திகதி வீரியமிக்க சூரிய புயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய புயல் தாக்கத்தால் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகள் பாதிக்கும் என்பதால் ஜிபிஎஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பல இடங்களில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.