தனியார் பேருந்துகள் இன்று முதல் வழமை போல் சேவையில் ஈடுப்படும்.வரையறையற்ற வகையில் தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை விநியோகிக்க தீர்மானித்துள்ளமை சிறந்ததாகும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கொவிட் தாக்கம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவை தொழிற்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் குறைந்தப்பட்சம் 15 சதவீதமளவில் தான் தனியார் பேருந்துகள் நாடு தழுவிய ரீதியில் சேவையில் ஈடுப்படுகின்றன.
லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்கள் பல நாட்களாக வரிசையில் காத்திருக்கிறார்கள்.
3 நாட்கள் வரிசையில் காத்திருந்தால் 40 லீற்றர் டீசல் மாத்திரமே கிடைக்கப்பெறுகிறது.3 நாட்கள் வரிசையில் இருந்து ஒரு நாளைக்கு மாத்திரம் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகை தரும் என குறிப்பிடப்பட்டுள்ளதை தொடர்ந்து அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைக்கு வரையறையற்ற வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளதால் இன்று முதல் தனியார் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்றார்.