2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் 21 வரை நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் தொடரானது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவிததுள்ளது.
நாட்டின் தற்போதைய ‘பொருளாதார சூழ்நிலையை’ மேற்கோள் காட்டி, போட்டியை நடத்துவதற்கு ஏற்றதாக இல்லை என, போட்டியின் உரிமையாளரான (Innovative Production Group FZE) விடுத்த கோரிக்கையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.