சிங்கப்பூரிற்குள் கோத்தபாய ராஜபக்சவை அந்த நாட்டின் அரசாங்கம் அனுமதித்தமைக்கு எதிராக இறுதிநேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் மாத்திரம் கலந்துகொண்டுள்ளர் என ஸ்டிரெய்ட் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரின் ஹொங்லிம் பார்க்கில் உள்ள ஸ்பீக்கர்ஸ் கோர்னரில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
2020 தேர்தலில் மக்கள் குரல் சார்பில் போட்டியிட்ட பிரபு இராமச்சந்திரன் இதனை ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த விடயத்தை பற்றி எவரும் பேசுகின்றார்கள் இல்லை,யாராவது இது குறித்து பேசவேண்டும் என நான் கருதுகின்றேன், கோத்தபாய ராஜபக்சவை இங்கு வைத்திருப்பதன் மூலம நாங்கள் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிக்கின்ற செய்தி குறித்து யாராவது பேசவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் வேண்டப்படாதவர் அரசியல்ரீதியிலநன்கு அறியப்பட்டவர் ஊழல்களில் ஈடுபட்டிருக்ககூடியவர்,அரசாங்கம் தெரிவித்துள்ளது போல அவர் இலங்கை கடவுச்சீட்டுடன் உள்ள இன்னொரு நபரில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதித்துறையில் பணியாற்றும் பிரபு ஆர்ப்பாட்டம் குறித்து வெள்ளிக்கிழமை காலை அறிவித்திருந்தார், அவர் நான்கு மணிமுதல் ஆறு மணிவரை ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என அறிவித்திருந்த போதிலும் எவரும் கலந்துகொள்ளாததால் 4.48க்கு ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டார்.
முகநூலில் அவர் வெளியிட்ட நேரலையை 20 பார்வையிட்டுள்ளனர்.
68 வயது புளொக்கரும் கலந்துகொண்டுள்ளார் அவரும் தேர்தலில் போட்டியிட்டவர்.
ஏன் ராஜபக்ச தனது இராஜினாமாவை சிங்கப்பூரில் அறிவிப்பதற்கு திட்டமிட்டார் என கேள்வி எழுப்பிய அவர் சிங்கப்பூரில் அவருக்குள்ள வங்கிக்கணக்குகளை பகிரங்கப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.