பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளை தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அனைத்து கட்சிகளின் பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் சபாநாயகரிடம் ரணில் விக்கிரமசிங்க விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அனைத்து கட்சி பிரதமரின் பெயரை சமர்ப்பிப்பதற்கு ஐக்கியமக்கள் சக்தி இணங்கியுள்ளது என ஹர்சா டி சில்வா டுவிட்டரில் தெரிவித்திருந்த நிலையிலேயே சஜித்பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.