எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று அறிவித்ததன் பிரகாரம் சில பிரதேசங்களில் எரிபொருள் வரிசைகளில் பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், இன்று ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் அது தொடர்பில் அறியாதவர்களாகவே உள்ளனர்.
வாகன உரிமையாளர்களின் இலக்கங்கள் பெறப்பட்டு, பெற்றுக்கொள்ள வேண்டிய எரிபொருளை குறிப்பிட்டு, எரிபொருள் நிலையங்களுக்கு வந்தவுடன் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டுமெ தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள வரிசைகளை நிர்வகிப்பதற்கு மாத்திரமே டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சர் விஜேசேகர முன்னதாக தெரிவித்தார்.
எரிபொருள் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதால், பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் எதிர்பார்க்கப்பட போதிலும் எரிபொருள் கப்பல் மேலும் தாமதமாகியுள்ளதால், பொதுமக்கள் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பல மணிநேரம், பல நாட்கள் வரிசையில் நின்று எரிபொருள் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.