நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து விலகிய எமக்கு மீண்டும் அவரை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்க வேண்டிய தேவை கிடையாது.
விமல் வீரவன்ச குறிப்பிட்ட விடயம் அடிப்படையற்றது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவித்தார்..
இதன் போது குறுக்கிட்ட விமல் வீரவன்ச எம் . பி .ஜனாதிபதி குறிப்பிட்டதையே நான் குறிப்பிட்டேன்,குறித்த விடயம் பொய்யானதாயின் ஜனாதிபதியே பொய்யுரைத்துள்ளார்.ஆகவே நீங்கள் உங்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் அதனை கேட்டுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டார்.
பாராளுமன்றில் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தொடரின் போது விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர சிறப்பு கூற்றை முன்வைத்த உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு இரு தரப்பு வாதங்கள் இடம்பெற்றன.
விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்து கூறுகையில்
அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளமை அடிப்படையற்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்ததை தொடர்ந்து சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினர் எதிர்க்கட்சியினருடன் பல முறை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பிரதமர் பதவியை பொறுப்பேற்குமாறு பலமுறை எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தினோம்.
பிரதமர் பதவியை பொறுப்பேற்கு மாறு பலமுறை விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் நிபந்தனைகளின் அடிப்படையில் புறக்கணித்தார்.
இவ்வாறான நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டதாக விமல் வீரவனச குறிப்பிட்டமை அடிப்படையற்றது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டக் கொள்கிறேன்.
இதன்போது ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய விமல் வீரவன்ச,ஜனாதிபதி எம்மிடம் குறிப்பிட்;டதையே நான் குறிப்பிட்டேன் அவ்வாறாயின் அவர் பொய்யுரைத்திருக்கலாம்.
அதனை அவரிடம் கேளுங்கள் உங்களின் பெயர் (மஹிந்த அமரவீர) நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவை பிரமராக நியமியுங்கள் என இவர்கள் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள் என ஜனாதிபதி தான் குறிப்பிட்டார். இவ்விடயம் பொய்யாயின் பொய்யுரைத்தது நான் அல்ல உங்கள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ என்றார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் வினவினோம்.ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிக்குமாறு தான் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டோம்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றினைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால் தான் 2018ஆம் ஆண்டு தேசிய அரசாங்கத்தில் இருந்த வெளியேறினோம். பின்னர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து பிரச்சினைகள் தீவிரமடைந்ததுள்ளது.
நாங்கள் எந்நிலையிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் யோசனையை முன்வைக்கவில்லை. பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி பிரமாணம் செய்யும்வரை அதனை நாங்கள் அறிந்திருக்கவில்லை ஆகவே பொய்யுரைக்க வேண்டாம்..பல முறை பொய்யுரைப்பது உண்மையாகிவிடாது.
இதன்போதும் மீண்டும் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பியை விமல் வீரவன்ச,நிமல் சிறிபால டி சில்வா பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை பரிந்துரைக்கவில்லை என்பதை உங்களால் குறிப்பிட முடியுமா என மஹிந்த அமரவீரவை நோக்கி வினவினார்.
இதற்கு பதிலளித்த மஹிந்த அமரவீர நான் இருக்கும் போது அவர் அவ்வாறு குறிப்பிடப்பட வில்லை என்றார்.நீங்கள் காலையில் குறிப்பிடுவதை மாலையில் இல்லை என்று குறிப்பிடுவீர்கள் என்றார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முறையான தீர்மானத்திற்கமையவா நீங்கள் அமைச்சு பதவியை பொறுப்பேற்றீர்கள் என விமல் வீரவன்ச மஹிந்த அமரவீரவிடம் வினவினார்.
எமது கட்சியை பிளவுப்படுத்த இவ்வாறானவர்கள் உள்ளார்கள்.இவர்கள் கடந்த காலங்களில் கட்சியையும்,அரசாங்கத்தையும் பிளவுப்படுத்தினார்கள்.
சர்வதேசத்தை பகைத்துக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயம் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை செய்தது யார்.
ஒரு ஆசனத்தில் பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்றார்.