இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் இலங்கைக்கு கடன் அடிப்படையில் எரிபொருட்களை வழங்குவதாயின், அது தொடர்பில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்தரவாதமொன்றை கோருவதற்கு இந்திய எக்ஸிம் வங்கியினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் இலங்கைக்கு ஏற்கனவே 700 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்டத்தின் கீழ் 40,000 மெற்றிக் டொன் டீசல் கொண்ட கடைசிக் கப்பல் 16 ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவிருந்தது.
இந்நிலையில், மேலும் 500 மில்லியன் டொலருக்கான எரிபொருளை கடனாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அந்த கடன் வசதி கிடைத்தால் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கிடைத்த ‘கிரெடிட் லைன்’ தொகை 1200 மில்லியன் டொலராக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.