விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டுத்துறை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 46ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மரதன் ஓட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கு நெஸ்ட்லே லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் அனுசரனை வழங்கியுள்ளது.
பல்லாண்டு காலமாக தேசிய மரதன் ஓட்டப் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிவந்துள்ள நெஸ்ட்லே லங்கா நெஸ்டமோல்ட், மரதன் ஓட்டப் போட்டியில் இருபாலாரிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அனுசரணையை வழங்கியுள்ளது.
’35 வருடங்களுக்கு மேல் திறமையான விளையாட்டு வீரர்களின் அபிலாஷைகளை வலுப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் அவர்களது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கான கலங்களை உருவாக்கும் நோக்கில் இலங்கையில் மரதன் ஓட்டப் போட்டிகளில் மிகப் பெரிய பங்காளியாக நெஸ்டமோல்ட் திகழ்ந்து வருகிறது. தற்போதைய நிச்சயமற்ற காலகட்டத்தில் இலங்கையின் 6 மரதன் வெற்றியாளர்களுக்கு அனுசரணை வழங்குவதில் நெஸ்லே லங்கா நிறுவனம் பெரு மகிழ்ச்சி அடைகின்றது.
‘அடுத்துவரவுள்ள போட்டிகளுக்கு அவர்கள் மனோரீதியாகவும் உடல்ரீதியாகவும் தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த அனுசரணை ஊடாக உதவுகின்றோம். நாங்கள் வழங்கிவரும் ஆதரவு விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை சிறப்பாக தொடரவும் வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்லவும் உதவும் என நம்புகின்றோம்’ என நெஸ்லே லங்கா பிஎல்சி நிறுவனத்தின் உதவித் தலைவர் ருவன் வெலிகல தெரிவித்தார்.
நெஸ்டமோல்ட் அனுசரணையை பெற்ற 6 வீரர்களில் மலையகத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன், வேலு கிருஷாந்தினி ஆகியோரும் அடங்குகின்றனர்.
இவர்கள் இருவரும் தேசிய மரதன் ஓட்டப் போட்டிகளில் முறையே ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்றவர்களாவர்.
பதக்கங்களை வென்றெடுத்த 6 மரதன் வீர, வீராங்கனைகளுக்கு நெஸ்டமோல்ட் அனுசரணை வழங்கப்பட்ட வைபவத்தில் ருவன் வெலிகல, நெஸ்லே லங்கா பிஎல்சியின் அனுசரணை மற்றும் செயற்பாட்டு பிரிவு சிரேஷ்ட முகாமையாளர் சுகத் சஜீவ, விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.