நாட்டின் தொடர்ச்சியாக லிட்ரோ எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. பல நாட்களாக எரிவாயு பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த விஜித ஹேரத் கடந்த வெள்ளிக்கிழமை பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர் 15 ஆம் திகதி புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
இருப்பினும், நாட்டின் தொடர்ச்சியாக பல நாட்களாக லிட்ரோ எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள லிட்ரோ விநியோகம் நிலையங்களுக்கு முன்பாக எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எரிவாயு ஏற்றிய கப்பல் தல்தியவத்த கடற்பரப்பில் நங்குரம் இடப்பட்டுள்ளது. 3,900 மெற்றிக் தொன் ஏற்றிய குறித்த கப்பல் தொடர்ச்சியாக 6 நாளாக கட்டணம் செலுத்தப்படாது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் விடுவிப்பதற்காக 2.5 மில்லியன் டாலர் தேவைப்படுவதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கப்பலுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கான டொலர் இல்லாத காரணத்தினால் தொடரச்சியாக கப்பல் நங்குரமிடப்பட்டுள்ளமையால் அதற்கான தாமத கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.