இலங்கை எதிர்கொண்டுள்ள முன்னொருபோதும் இல்லாத பொருளாதாரநெருக்கடி மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியாக மாறாலாம் என ஐநா எச்சரித்துள்ளது.
இது முழுமையான மனிதாபிமான அவசரநிலையாக மாறாலம் என நாங்கள் கவலைகொண்டுள்ளோம்,இதற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என ஐநாவின் மனிதாபிமான முகவர் அமைப்பான ஓசிஎச்ஏயின் பேச்சாளர் ஜென்ஸ் லார்கே இன்று தெரிவித்துள்ளார்.
பெருமளவு மக்கள் தற்போது போதிய உணவு இல்லாத நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அவர் குடும்பங்கள் மருத்துவசேவைகள் பாதுகாப்பு மற்றும் சிறுவர் கல்வியை பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.