உக்ரேன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் 107 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், மோதலின் போது பிடிப்பட்ட இரண்டு பிரித்தானிய மற்றும் மொரோக்கோ பிரஜைகளுக்கு கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் மற்றும் கொரோக்கோவைச் சேர்ந்த பிரஹிம் சவுடுன் ஆகிய மூவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் கூலிப்படையினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரேனில் உள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியிலுள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாத நீதிமன்றத்தால் குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தும் உக்ரேனும் போர்க் கைதிகளைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களை மீறியதாக இந்த தண்டனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரித்தானியர்களின் குடும்பத்தினர் தாங்கள் உக்ரேனிய இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய உறுப்பினர்கள் என்றும் கூலிப்படையினர் அல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.
அவர்கள் அனைவரும் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்புவதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.