புவியின் தென் துருவத்திலுள்ள அந்தாட்டிக்காவில் புதிய பனிப்பொழிவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீன்களின் வயிறு, மனிதனின் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வரிசையில் இப்போது பனிப் பொழிவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்தாட்டிக்காவில் மனிதர்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பனிப்பொழிவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் தென்படுவதை நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தாட்டிக்காவில் உள்ள 19 இடங்களில் இருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதித்ததில் ஒவ்வொன்றிலும் சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் இருந்துள்ளன.
ஒரு லிட்டர் பனியில், சராசரியாக 29 மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் சிதைவதால் உருவாகும் மிகச் சிறிய துணுக்குகள், செயற்கை நார்கள், பிளாஸ்டிக் மணிகள், மருத்துவ நுண் பிளாஸ்டிக் உபகரணங்கள் போன்ற மைக்ரோ பிளாஸ்டிக்கானது கடல் நீர், நிலம் தொடங்கி காற்றில்கூட வியாபித்திருக்கின்றன.
அதிகபட்சமாக 5 மிமீ அளவில் (அரிசியின் அளவு) தொடங்கி கண்ணுக்கே புலப்படாத நுண்ணிய துகள்களாகவும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருக்கின்றன.