கருணாரத்னே அபார சதம்: மேற்கிந்திய தீவுகள் அணியை பந்தாடிய இலங்கை
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 276 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக விஷாஹல் சிங் 96 ஓட்டங்களை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 386 ஓட்டங்களை குவித்தது. கருணாரத்னே 131 ஓட்டங்களையும் குஷால் பெரேரா 87 ஓட்டங்களையும் குவித்தனர்.
பின்னர்ட் 110 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 175 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இலங்கை அணிக்கு 66 ஓட்டங்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் 20.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.