“வைகாசித் திங்களில் வருவேன்”….
“வைகாசித் திங்களில் வருவேன் ஒரு நாள் என்ற கண்ணகி அம்மனின் வரலாற்றுக்கு அமைவாக வருடாந்தம் வைகாசி பூரணைக்கு முதல் திங்கள் கண்ணகை அம்மனுக்கு பொங்கல் விழாக்காண முந்திய திங்கள் (06.06.2022 இன்று) புனித தீர்த்தம் எடுக்கப்பட்டு ஏழு நாட்கள் காட்டு விநாயகர் ஆலயத்தில் விளக்கெரியும்.
மரபு முறைப்படி தீர்த்தமெடுக்கும் புனிதப் பணி இடம்பெறுகிறது. ஆரம்ப காலங்களில் நந்திக் கடலிலேயே விளக்கு ஏற்றுவதற்கான கடல் நீர் எடுக்கப்பட்டது. பிற்காலத்தில் நந்திக்கடலில் தண்ணீர் குறைந்தமையால் முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை எனும் ஊரிலுள்ள தீர்த்தக்கரை எனுமிடத்திலுள்ள கடலிலேயே தீபம் ஏற்றுவதற்கான கடல் நீர் எடுக்கப்படுகிறதாக வரலாறுகள் கூறுகின்றது.
ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை 13.06.2022 இரவு காட்டு விநாயகர் ஆலயத்தில் கச்சு நேர்ந்து வளர்ந்துவைத்து பொங்கல் சிறப்பாக நடைபெறும். பெருமளவான பக்தர்கள் பொங்கல் உற்சவத்தில் கலந்துகொள்வது சிறப்பிற்குரியது.
எட்டாம் நாள் அதிகாலை 4.00 மணியளவில் காட்டு விநாயகர் ஆலயத்திலிருந்து மடைபண்டமெடுக்கப்பட்டு வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தை அடையும்.
அன்று 13.06.2022 திங்கட்கிழமை பொங்கல் உற்சவம் சிறப்பாக நடைபெறுமென்பது குறிப்பிடத்தக்கது.
உப்பு நீரில் விளக்கெரியும் அதிசயமும் அற்புதமும் நிறைந்த ஆலயம் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்